அதிரை நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்ட இருக்கும் இடத்தை பார்வையிட்ட திருச்சி மண்டல நகராட்சி ஆணையர்களின் தலைமை அதிகாரி!

திராம்பட்டினம் நகராட்சியாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் முடிந்து கவுன்சிலர்கள் தலைவர் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டடம் கட்டுவதற்கு இடம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அதிரை நகராட்சித் தலைவர் துணைத் தலைவர் ஆலோசித்து அனைத்து கட்சி, அனைத்து முஹல்லா கூட்டமைப்பு மற்றும் தெரு முஹல்லா ஜமாத் நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்று தீர்மானித்தனர்

அதன்படி ஏப்ரல் 26, 2022 அன்று அதிரை ரிச்வே கார்டனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அந்த ஆலோசனை கூட்டத்தில் சகோதரர் P M K தாஜுதீன் அவர்கள் ஈசிஆர் ரோட்டில் அவருக்கு சொந்தமான இடத்தை அதிரை நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட கொடுப்பதற்கு முன்வந்தார்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு மிகுந்த சந்தோசத்துடன் விடைபெற்றுக் கொண்டனர்

அதிரை நகராட்சி நிர்வாகம் இடம் தேர்வான விஷயத்தை உடனே தமிழக அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி மறுநாளே அரசு உயர் அதிகாரி திருச்சி மண்டல நகராட்சி ஆணையர்களின் தலைமை அதிகாரி ஜானகி ரவிச்சந்திரன் RDMI அதிரைக்கு வருகை தந்து இடத்தை பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள் கட்டிடப் பணி துரிதமாக துவங்க வழிவகை செய்வதாக வாக்குறுதி கொடுத்து சென்றிருக்கிறார்கள்

நிகழ்வின் பொழுது அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் துணைத் தலைவர் இராம குணசேகரன் ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா K இதிரீஸ் அஹமது அதிரை நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Prayer Times