அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளியில் புனிதமான ரமலான் மாதத்தில் கடைசிப் பத்தில் நபிவழிப்படி இஃதிகாஃப் இருப்பது தொடர்ந்து நடப்பவையாகும்
இஃதிகாஃப் இருக்கும் மக்களுக்கு கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக மரைக்கா பள்ளி நிர்வாகத்தின் பார்வைக்கு கொன்று சென்றனர் பள்ளி நிர்வாகிகள் உடனே 8-வது வார்டு உறுப்பினர் அபுதாகிர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்ற 8-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் அவர்கள் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல்கரீம் அவர்களை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார்
கோரிக்கையை செவிமடுத்த நகராட்சித் தலைவர் மரைக்காயர் பள்ளியை சுற்றிலும் கொசு மருந்து அடிக்க நகராட்சி ஊழியருக்கு உத்தரவு பிறப்பித்தார் உத்தரவை செவிமடுத்த நகராட்சி ஊழியர்கள் உடனே சென்று மரைக்கா பள்ளிவாசலை சுற்றிலும் கொசு மருந்து அடித்து சுத்தம் செய்தனர்