அதிராம்பட்டினம் பகுதியில் பரவும் காய்ச்சலுக்கு டாக்டர் மீராசாஹிப் விளக்கம்!

தமிழகத்தில் ஸ்கரப் டைப்ஸ் என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது அதிராம்பட்டினம் ,மதுக்கூர் போன்ற பகுதிகளில் அதிகமானவர்கள் காய்ச்சல் மற்றும் முதுகு வளியால் அவதிபட்டு வருகின்றனர் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் ஸ்க்ரப் டைபஸ் நோய் தச்க்கம் விவசாயிகள், வனபகுதியில் வசிபோர், புதர் மண்டிய பகுதியில் இருப்போர் மேற்கண்ட நோயால் அவதிபட்டு வரும் வேலையில் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகமானோர் காய்ச்சலால் அவதிபட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது இதுபற்றிய தெளிவான விளக்கத்தை அதிராம்பட்டினம் நகரில் அனைவராலும் புகழப்பட்ட மருத்துவர் மீராசாகிப் அவற்களின் விளக்கம்.

அதிராம்பட்டினம் நகரில் அதிகமானோர் காய்ச்சல், தடுமல் போன்ற நோயால் மருத்துவல் செய்துகொள்ள வருகின்றனர் அவர்களின் டெம்பரேச்சர் அளவு பார்த்து மருத்துவம் செய்யப்படுகின்றது

காய்ச்சல் தொடர்ந்து இரண்டு நாட்கள் நீடித்தால் அந்த நோயாளிக்கு இரத்தம் பரிசோதனை செய்யப்படு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது அதிராம்பட்டினம் நகரில் சீசன் காய்ச்சல் தான் பரவிவருகிறது இந்த காய்ச்சல் நான்கு ஐந்து நாட்கள் வரை நீடித்து நோயாளிகள் பலைய நிலைமைக்கு வந்து விடுகின்றனர்

இந்த காய்சல் பற்றி யாரும் பயப்பட தேவை இல்லை இருந்தாலும் வீதியில் விற்பனை செய்யும் சுகாதாரம் இல்லாத உணவுகள் மற்றும் கண்ட கண்ட உணவுகளை தவிற்க்க வேண்டும் நாம் வாழும் பகுதியை தூய்மையாக வைத்து கொள்ளவும்

பெரும்பாலான நோயாலிகளுக்கு இரத்தம் டெஸ்ட் பார்க்கப்பட்டு வருகிறது அப்படி ஒன்றும் பெரிய நோய் பரவல் ஏதும் இல்லை மக்கள் தினசரி சாப்பிடும் தண்ணீரை சுடவைத்து சாப்பிடவும் இது பருவநிலை மாற்றம் காரணம் இந்த காய்ச்சல் தலைவளி, உடம்புவலி, இருக்கும் இதற்கு மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்று மருந்து எடுத்து கொள்ளவும் இந்த காய்ச்சல் விரைவில் சுகம் கிடைத்து பழைய நிலைக்கு மக்கள் வருகின்றனர் என்றார்

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders