காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும். குத்பாகலி முகமது இஸ்மாயில் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹும். சவுக்கத் அலி சாபு என்கின்ற முகமது இப்ராஹீம் ஆலிம் அவர்களின் மருமகனும், மர்ஹும். கலிபுல்லா ஆலிம், மர்ஹும். அகமது அன்சாரி ஆலிம், அபுல் ஹஸன் ஆலிம் ஆகியோரின் சகோதரரும், அமானுல்லா அவர்களின் மச்சானும், முகமது இஸ்மாயில் ஆலிம், நூருல் அமீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய குத்பா காரி கத்தீப் O.M. தாஜுதீன் ஆலிம் அவர்கள் நேற்று 29/12/2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 10:15 மணிக்கு கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 30/12/24 திங்கட்கிழமை மாலை அஸர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜுமுஆ பள்ளி மையாவடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.