அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது காசிம் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், ராவுத்தர், நைனாமலை, அன்சாரி ஆகியோரின் மாமியாரும், அபுதர்தா, ஹசன் சர்தார், ஜாமிர், முகம்மது அர்கம், இம்ரான் கான் ஆகியோரின் உம்மம்மாவும், முகம்மது நலீம், ஆதில் அகமது இவர்களின் வாப்புச்சாவும், ஜமால் முகம்மது, அப்துல் அஜீஸ் இவர்களின் தாயாருமான ஹாஜிமா நபீசா அம்மாள் அவர்கள் நேற்று 25/11/2024 இரவு 10:30 மணியளவில் அவர்களின் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 26/11/2024 லுகர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.