ஹனீப்பள்ளி மக்தப் மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி… (புகைப்படங்கள்)

ஹனீப்பள்ளி மக்தப் மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டமும், அறையாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நேற்று 21.10.2024 திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் ஹனீப்பள்ளி அருகில் உள்ள ஜனாப் சுஹைப் அவர்களின் இல்லத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது!

கிராத்துடன் துவங்கிய நிகழ்வு நான்காம் வகுப்பு மாணவர்களின் நபி புகழுடன் தொடங்கி, கல்வியின் அவசியத்தை பற்றி சில நிமிட மாணவரின. பேசினர்!

அதிரை மக்தப் மூஆவின் ஜனாப் சுலைமான் மௌலானா அவர்கள் கைபேசியினால் ஏற்படும் தீமைகள் அதன் விபரீதங்கள் என்ன என்பதை ஒரு நிகழ்வை மைய்ய படுத்தி,
முதலில் நம்மில் இருந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், குறுகிய நேரத்தில் சொல்லி விளக்கினர் !

ஜனாப் அப்துல் பாசித் மௌலான அவர்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் முக்கிய பங்கு மிக அவசியம் என்பதை ரத்தின சுருக்கமாக சொன்னார்கள்!

அதனை தொடர்ந்து மாணவர்களின் ரேங்க் கார்டு பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது! பின்னர்.. மக்தப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு தொடங்கியது!

முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு அதிரை மக்தப் மூஆவின் ஜனாப் சுலைமான் மௌலான அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள், மூன்றாம் இடம் மற்றும் வருகையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு.ஹனீப்பள்ளி கமிட்டி தலைவர் ஜனாப் முஹம்மது உமர் ஹாஜியார் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

தொழுகையில் சிறந்து விளங்கிய மாணவர்க்கு ஹனீப்பள்ளி இமாம் ஜனாப் ஜமால் முஹம்மது மௌலான அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

ஆறுதல் பரிசுகளை பெற்ற மாணவர்களுக்கு ஜனாப் முகைதீன் அப்துல் காதர் ஹாஜியார் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்வில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த நிகழ்வை பள்ளி ஆசிரியர்கள் ஜனாப் இல்யாஸ் மௌலானா மற்றும் ஜனாப் அப்துல் பாசித் மௌலானா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்!

மாணவர்களை ஊக்க விற்கும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

பெற்றோர்களும், மாணவர்களும், மஹல்லா வாசிகளும் ஆர்வத்துடன் முன் கூட்டியே நிகழ்வு நடைபெறும் இல்லத்திற்கு வருகை புரிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
அனைவருக்கும் தேநீருடன் சம்சா வழங்கப்பட்டது!

இனிதே துஆவுடன் நிறைவு பெற்றது! மக்தப் ஹனீப் மேம்பாட்டுக் குழுவினர் மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders