அதிராம்பட்டினம் ஏரிப்புரகரையில் அமைந்துள்ள அவிசோ மன நல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிராம்பட்டினம் தாய் டிரஸ்ட் சார்பாக விழையாட்டு போட்டி 10/10/2024 இன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு அவிசோ மன நல காப்பகத்தின் உரிமையாளர் மௌலவி சேக் அப்துல்லா ஹஜ்ரத் தலைமை தாங்கினார் அதிராம்பட்டினம் நகர தாய் டிரஸ்ட் இளைஞர்கள் முன்னிலை வகித்தனர்
பின்பு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தாய் டிரஸ்ட் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசு வழங்கிய பின்பு தாய் டிரஸ்ட் இளைஞர்கள் டைம்ஸ் ஆஃப் அதிரைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். சில குழந்தைகள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும். கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இப்பேர்பட்ட குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பார்கள் இவர்களுக்காக நாம் ஏதாவது போட்டி நட்டத்த வேண்டும் என்று நினைத்தோம்
மேலும் இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர். நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர்கள். இந்த பாதிப்பை, மூளை செயல்திறன் குறைபாடு என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இது ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு மன நல காப்பகம் அதிராம்பட்டினத்தில் நடத்தி வருவது தஞ்சாவூர் மாவட்ட மக்களின் கனவை நினைவாக்கி உள்ளார் இந்த காப்பகம் அவிசோ மன நல காப்பபம் என்ற பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது
இந்த காப்பகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பிள்ளைகள் சேர்ந்து உள்ளனர் இவர்களை நல்லமுறையில் பராமரித்து வருவதை நேரில் பார்க்கும்போது எல்லாபுகழும் இறைவனுக்கு என்று சொல்ல வேண்டும்.
சில குழந்தைகள் காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்பட்டது தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புக்கள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன என்று பல ஆய்வுகள் கூறுவதை கானமுடிகின்றது என்றனர்.