மண்டல அளவில் நடைபெற்ற U-17 கைப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பள்ளி அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி!!

கடந்த சில நாட்களாக பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 14 பள்ளிகள் கொண்ட மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது…

இந்நிலையில் (02/09/2024) நேற்று நடைபெற்ற U-17 கைப்பந்து போட்டியில் 14 அணிகள் போட்டியிட்டனர்… அதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி அணி தம்பிக்கோட்டை வடகாடு அணியுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றது, அதனை தொடர்ந்து காலிறுதி போட்டியில் 5 ஸ்டார் அணியுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றது அதனை தொடர்ந்து அரையிறுதி போட்டியில் நாட்டுச்சாலையுடன் போட்டியிட்டு வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

நேற்று மதியம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரிந்தாவண் அணியுடன் போட்டியிட்டு அபார வெற்றிபெற்றது, மேலும் 11 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பந்து போட்டியில் மண்டல அளவில் அதிரை காதிர் முகைதீன் அணி வெற்றிபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது…

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders