அதிரையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி: மயிலாடுதுறை அணி சாம்பியன்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உமர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி ஈரோடு உள்பட மாவட்டங்களைச் சேர்ந்த 18 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் இறுதி போட்டிக்கு கொங்கு ஈரோடு அணி மற்றும் சாய் மயிலாடுதுறை அணி ஆகியவை தகுதிபெற்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கொங்கு ஈரோடு அணியை வீழ்த்தி சாய் மயிலாடுதுறை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

கொங்கு ஈரோடு அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இதேபோல் சி.வி.சி கீழக்கரை அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

இதனையடுத்து அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மனும் மேற்கு நகர தி.மு.க செயலாளருமான அஸ்லம் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் அன்சாரி, தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜமாலுதீன், இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!