டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய குர்ஆன் கிராஅத் போட்டியின் நிறைவு விழா அழைப்பிதழ்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 13th February 2024, 01:28 pm

TIMES OF ADIRAI நடத்திய இரண்டாம் ஆண்டு அல்-குர்ஆன் கிராஅத் போட்டி இரண்டு பிரிவுகளாக கடந்த 2023 நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் கால அவகாசம் 2024 ஜனவரி 5 வரை நீட்டிக்கப்பட்டது. இரண்டு பிரிவுகளில் சுமார் 75க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பெறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர்களின் ஒப்புதல் பெற்ற சில வீடியோக்கள் மட்டும் TIMES OF ADIRAI Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அல்-குர்ஆன் கிராஅத் போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் நிறைவு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16.02.2024 (வெள்ளிக்கிழமை) மாலை 4:30 மணி அளவில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. ஆகையால் போட்டியாளர்கள், உலமாக்கள், பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : இவ்விழா ஆண்களுக்கானது மட்டுமே!

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. எனவே போட்டியாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் பரிசுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு: பரிசுகளை நேரடியாக பெற இயலாத நபர்கள், தங்கள் சார்பாக யாரையேனும் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம், நிகழ்வுக்கு பிறகு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.

நிறைவு விழா முழுவதும் TIMES OF ADIRAI youtube பக்கத்தில் நேரலை செய்யப்படும் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்!

மேலும் தொடர்புக்கு : 9994222582

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos