மாநில அளவில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் சாதனை!!

பட்டுக்கோட்டை, பிப். 10: மாநில அளவில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

மதுரை டெகத்லான் ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி மதுரை ஜெனித் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவர் அ.ஆத்திப் அகமது கலந்துகொண்டு 11 வயதுக்குள்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2ஆம் இடம், 13 வயதுக்குள் பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3ஆம் இடம் பெற்று சாதனை நிகழ்த்தினார்,

இதையொட்டி, சாதனை மாணவரை பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.மாலதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். மாணவர் அ.ஆத்திப் அகமது, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ. அஜுமுதீன் மகன் ஆவார்.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times