2வது வார்டுக்கு உட்பட்ட Cmp லைனில் ஹனிப் பள்ளி எதிர்புறம் உள்ள மின்மாற்றி. கடந்த பல மாதங்களாக அதற்க்கு உட்பட்ட பகுதிகளில் திடிர்னு குறைவாகவும், சில நேரங்களில் கூடுதலாகவும் மின்சாரம் வருவதால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதன பொருட்கள் டியூப் லைட், இன்வெட்டர் மற்றும் ஏசி, மின் விசிறி என பல்வேறு பொருட்கள் தினமும் அடிபட்டு விடுவது தொடர் கதையாக உள்ளது.
சீரான மின்சாரம் வருவதும் இல்லை. மேலும் மின் மாற்றியில் ஆயில் கசிந்து கொண்டும், அதன் பின்புறம் உள்ள கம்பி சரியாக பொறுத்தப் படாமல் இருக்கிறது. மேலும் மின் கம்பிகள் தொய்வாக உள்ளதால்
சிறிய காற்று அடித்தாலும் உடனே பீஸ் போய் விடுகிறது.
ஆகவே மின்மாற்றியை நல்ல முறையில் பராமரிப்பு செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும். கால தாமதம் செய்யாமல்
துரிதமாக சரி செய்ய வேண்டுமாய் 2வது வார்டு கவுன்சிலருக்கும் மின்சார வாரியத்திற்கும் பொது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
Very engaging and funny! For more information, click here: LEARN MORE. Let’s chat!
I thoroughly enjoyed this article. The author’s perspective was fascinating and left me with a lot to think about. Let’s dive deeper into this subject. Click on my nickname for more insights!