சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 76 நிமிடங்கள் தொடர் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த 50 மாணவர்கள்!!

நமதூர் A.L மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று (15.08.2023) 77வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கிராத் ஓதப்பட்டது. Jackie Book of World Records தலைமையில் 50 மாணவர்கள் 76 நிமிடங்கள் தொடர் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நமது பட்டுக்கோட்டை துணை தாசில்தார் மாண்புமிகு Dr.தர்மேந்திரா M.Sc., M.Phil , Ph.D., அவர்களும், பட்டுக்கோட்டை மூத்த வருவாய் ஆய்வாளர் மாண்புமிகு ஷேக் உமர்ஷா B.Sc., B.L., அவர்களும் வருகை புரிந்தார்கள்.

பள்ளி மாணவர்களின் அணி வகுப்பை ஏற்று நமது சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை துணை தாசில்தார் மாண்புமிகு Dr.தர்மேந்திரா M.Sc., M.Phil , Ph.D., அவர்கள் தேசிய கொடி ஏற்றி பின்னர் சுதந்திர தினத்தை பற்றி மாணவர்களுக்கு ஒரு இனிய உரை நிகழ்த்தினார்கள். இதை தொடர்ந்து மாணவியின் உரை நடைபெற்றது.

விழாவின் இறுதியாக JBWR- ல் உலக சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும், பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

2 Comments
  • Adelaidat
    Adelaidat
    June 28, 2024 at 4:00 pm

    Great mix of humor and insight! For additional info, click here: READ MORE. Any thoughts?

    Reply
  • Estert
    June 29, 2024 at 6:24 pm

    I found this article both enjoyable and educational. The points made were compelling and well-supported. Let’s talk more about this. Check out my profile for more interesting reads.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders