Adirai Women Entrepreneurs நடத்தும் 4-வது பெண்களுக்கான சிறப்புக் கண்காட்சி!

அதிராம்பட்டினத்தில் சில காலங்களாக பெண்கள் அதிகமானோர் சிறு தொழில்கள் செய்து வருவது அதிகமாகி வருகிறது. உணவு வகைகள், பல வடிவமைப்பில் மருதாணி இடுதல், பேக்கிங் வகைகள், ஆடைகள், இன்னும் பல சிறு தொழில்களை ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த மூன்று முறையும் சிறப்பான முறையில் பெண்களுக்கான கண்காட்சியை ADIRAI WOMEN ENTREPRENEURS வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ADIRAI WOMEN ENTREPRENEURS நடத்தும் 4-வது பெண்களுக்கான சிறப்புக் கண்காட்சி வருகின்ற செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) மாலை 4 மணி முதல் 8 மணி வரை AL School வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

அதிரை பெண் தொழில்முனைவோரின் தனித்துவமான தயாரிப்புகள், சுவையான உணவு வகைகள், நவீன ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் எனப் பலதரப்பட்ட அரங்குகள் இதில் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் (Women Only). உள்ளூர் பெண்களின் சுயதொழில் முயற்சிகளை ஆதரிக்கவும், அவர்களின் தொழில் கனவுகளுக்கு தோள் கொடுக்கவும் அனைவரும் தவறாமல் வருகை தந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!