அதிராம்பட்டினம் AFWA All Sports Club மைதானத்தில், AFCC Friends கிரிக்கெட் கிளப் நடத்தும் 21 வயதிற்குட்பட்டோருக்கான (Under 21) கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட் 28) தொடங்கி நாளையும் (ஆகஸ்ட் 29) நடைபெறுகிறது.
இத்தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ₹6,000, இரண்டாம் பரிசாக ₹4,000, மூன்றாம் பரிசாக ₹3,000 மற்றும் நான்காம் பரிசாக ₹2,000 உடன் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.
இளைய தலைமுறை வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விறுவிறுப்பான இந்த கிரிக்கெட் போட்டிகளைக் காண அனைத்து விளையாட்டு ரசிகர்களும், பொதுமக்களும் மைதானத்திற்கு வருகை தந்து வீரர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



