நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மீராசாகிப் அவர்களின் மகளும் அ.மீ முகைதீன் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும் பஷீர் அகமது, அகமது தாஸின், அகமது ஜலீல் மற்றும் மீராசா மரைக்காயர் அவர்களின் தாயாரும் முகமது தம்பி, மர்ஹும் ஜக்கரியா அவர்களின் மாமியாருமாகிய சுபைதா அம்மாள் அவர்கள் இன்று (26-04-2026) CMP லைன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (26-04-2026) மக்ரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


