சமூக வலைதளங்களில் கடந்த சில மணிநேரங்களாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதலில், அதிராம்பட்டினத்தை சேர்ந்த அஸ்பக் அகமது என்பவர் உயிரிழந்ததாக ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
“saudinews.com” என்ற இணையதளப் பெயருடன் பகிரப்படும் இந்தச் செய்தி முற்றிலும் உண்மையானது அல்ல. இது திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு வதந்தி என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த விளக்கம்:
யார் உயிரிழந்ததாகச் செய்தி பரப்பப்பட்டதோ, அந்த நபர் (அஸ்பக் அகமது) தற்போது உயிருடனும், பாதுகாப்பாகவும் உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
அஸ்ஸலாமு அலைக்கும், என் பெயர் அஸ்பக் அகமது. நான் அதிராம்பட்டினத்தைப் சேர்ந்தவன். நான் சவுதியிலிருந்து ஊருக்கு வந்து தற்போது 15 நாட்களுக்கு மேலாகிறது. ஈரான் – இஸ்ரேல் போரைச் சாக்காக வைத்து எனது புகைப்படத்தைப் பயன்படுத்தி நான் இறந்துவிட்டதாக தவறான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். தயவுசெய்து யாரும் இதை நம்ப வேண்டாம், இதைப் பகிர வேண்டாம்.”
பொதுமக்களுக்கு வேண்டுகோள்,
இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள். பாதிக்கப்பட்ட நபரே தான் நலமாக இருப்பதாக ஆடியோ ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். எனவே, இந்தத் தவறானச் செய்தியை வாட்ஸ்அப் அல்லது இதர சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வதந்திகளைத் தவிர்ப்போம்!
சம்மந்தப்பட்டவரின் ஆடியோ விளக்கம்.⬇️


