காதிர் முகைதீன் கல்லூரியை சார்ந்த மாணவர்கள் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் சாதனை!

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் மாநில சிறுபான்மை ஆணையம் 2024-2025 ஆம் ஆண்டின் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது அதில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் பிரிவில் தஞ்சாவூர் மாவட்ட அளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியை சார்ந்த AH ஷேக் உமர் முதல் பரிசினை வென்றார் அதனை தொடர்ந்து ஆங்கில பிரிவில் முதல் இடத்தை காதிர் முகைதீன் கல்லூரியை சார்ந்த மாணவி அஸ்மா அவர்களும் அதே பிரிவில் மூன்றாம் இடத்தை காதிர் முகைதீன் கல்லூரியை சார்ந்த பாத்திமா அவர்களும் இடம் பெற்றனர்.

தேர்வு பெற்ற மாணவர்களுக்கு நேற்று சென்னையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு முதல் பரிசு 20,000₹ ரூபாயும் மூன்றாம் பரிசு 5,000₹ ருபாய் ரொக்க பரிசையும் அரசின் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Prayer Times

Advertisement