அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாட்டம்!!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதிராம்பட்டினம் தேசிய பசுமைப்படை, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம், அதிரை FM 90.4, தமிழ்நாடு வனத்துறை ஆகியவை இணைந்து திருவாரூர் மாவட்டம் ஒருங்கிணைப்புகளின் மூலம் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் “நமது வாழ்க்கை முறையை மாற்றுவோம்” என்ற தலைப்பின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் நமது பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட வன வனச்சரக அலுவலர் செல்வி. எம். சைதானி அவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முனைவர். ச. சிவசுப்ரமணியன் அவர்களும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திருமதி. மீனாகுமாரி அவர்களும் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் அறிஞர் முனைவர். ச. சிவசுப்பிரமணியன் அவர்கள் நெகிழியை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்தார். இமாம் ஷாஃபி பள்ளியின் முதல்வர் திருமதி மீனாகுமாரி அவர்களும் நெகிழியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி உரையாற்றினார்.

திருவாரூர் மாவட்ட வன அலுவலர் செல்வி. எம். சைதனி அவர்கள், வனத்துறை சம்பந்தமான மேல்படிப்புகள் மற்றும் இதர தொழில் படிப்புகளுக்கு நுழைவு தேர்வை எப்படி எதிர்கொள்வது? என்பதற்கான வழிமுறைகளை கூறி, மாணவர்களை ஆர்வப்படுத்தினார். அதன் பிறகு, மாணவர்கள் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தின் சுற்றுப்புறத்தில் இருந்த நெகிழி பொருட்களை அகற்றி, அப்பகுதியை தூய்மைப்படுத்தினர்.

மேலும் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் சில மரக்கன்றுகளை மாணவர்களும் வனத்துறை அலுவலர்களும் அப்பகுதியில் நட்டு வைத்தனர். அதன் பிறகு, “நெகிழியைத் தவிர்த்து சுற்றுப்புறத்தைப் பாதுகாப்போம்” என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக, திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அவர்களுக்கு, நமது பள்ளி முதல்வர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பு செய்தார்.

நமது தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வழிகாட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
0
Would love your thoughts, please comment.x
()
x