Lunar Eclipse 2023 : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! தொடங்கும் நேரம் எப்போது? முழு விவரம்!

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும்.

அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

முழு சந்திர கிரகணமானது, சந்திரன் பூமியின் நிழலை முழுவதுமாக கடந்து செல்லும் போது நிகழ்கிறது, இதன் காரணமாக சந்திரன் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்துக்கு மாறுகிறது.

சந்திரன் பூமியின் நிழலின் வழியாக பகுதியளவு மட்டும் கடந்து செல்லும் நிகழ்வை பகுதி சந்திர கிரகணம் என்று அழைக்கிறார்கள். இந்த நிகழ்வின்போது சந்திரனின் ஒரு பகுதி மட்டும் நிறம் மாறும்.

சந்திரன் பூமியின் நிழலின் வெளிப் பகுதி வழியாக செல்லும் போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது, இதனால் சந்திரன் வழக்கத்தை விட சற்று கருமையாக தோன்றும்.

இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் இருப்பவர்களால் பார்க்க முடியும். அத்துடன், பசுபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் பகுதியிலும் தெளிவாக பார்க்க முடியும்.

இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் இரவு 8.44க்கு தொடங்கி, இரவு 10.52 மணிக்கு உச்சம் பெறுகிறது. மே 6ஆம் தேதி அதிகாலை 1.01 மணிக்கு சந்திரகிரகணமாகனது நிறைவடைகிறது.

நகரம் வாரியாக சந்திரகிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு:

New Delhi: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Mumbai: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Gurugram: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Hyderabad: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Bengaluru: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Chennai: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Kolkata: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Bhopal: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Chandigarh: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Patna: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Ahmedabad: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Visakhapatnam: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

Guwahati: 8:44 pm (May 5) to 1:01 am (May 6)

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times