தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிரையை குளிர்விக்கும் மழை! மின்சாரமின்றி மக்கள் தவிப்பு!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 29th July 2022, 08:48 am

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் பரவலான பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இவ்வாண்டு மழைக் காலம் தொடங்கியது முதலே நமதூர் அதிரை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.

அதிரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் அதிரையை குளிர்விக்கும் விதமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, இதனால் ஒருபக்கம் பொது மக்கள் பலர் மகிழ்ச்சியில் இருந்தாலும், கனமழை நின்ற பிறகும் நீண்ட நேரம் மின்சாரம் தடைப்பற்று இருப்பது அதிரை மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

For the second day in a row, the rain is cooling the atmosphere! People suffering without electricity!

The Meteorological Department had informed that there will be good rains in many parts of Tamil Nadu today due to the low atmospheric circulation prevailing over Tamil Nadu.

Unlike the last few years, since the beginning of the rainy season this year, there has been widespread heavy rain in various parts of Tamil Nadu, including Namdur Athiri.

While the heat has been increasing in Adirai for the past few days, heavy rains with wind have been falling in the night hours for the past 2 days to cool down Adirai. On the one hand, although many people are happy, the fact that the electricity has been cut off for a long time even after the heavy rain has stopped has caused great disappointment among the people of Adirai.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter