குண்டும் குழியுமான சாலை! வாகன ஓட்டிகள் கவலை!

- Advertisement -
Ad imageAd image

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வார்டு 1 மற்றும் வார்டு 2 (CMP லைன்,கல்லுக்கொல்லை) பகுதியின் முக்கிய பிரதான சாலையாக கருதப்படும் வண்டிப்பேட்டை முதல் உள்ளூர் புதுக்கோட்டை இணைப்பு சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையாகும்.

இன்றைய தேதியில் இச்சாலை’யை காணவில்லை என்றே கூறலாம்!.

முன்பு பட்டுக்கோட்டை யூனியன் சாலையாக இருந்து தற்போது அதிரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு இச்சாலை நெடுஞ்சாலைத் துறை’க்கு மாற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இச்சாலையை சீரமைக்க பலமுறை முதலமைச்சர் தனிப் பிரிவு, துறை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்தும் பயனில்லை.

மழைக்காலத்தில் இச்சாலையின் நிலைமை என்னவோ படகு சவாரி செய்யும் அளவிற்க்கு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது!.
வரி நிலுவை பாக்கி இருக்கிறது என வீடு தேடி ஆட்களை அனுப்பும் நகராட்சி அலுவலகத்திலும் மனுக்கள் கொடுத்தும் பலனில்லை.

சாலையை காரணம் காட்டி வாக்குப் பெற்ற 2,1 ஆகிய வார்டு கவுன்சிலர்களும் மெளனம் காத்து வருகின்றனர். இவர்களை நம்பி வாக்களித்த மக்களின் நிலைமை?.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் நமது நிரூபர் விபரம் கேட்டபோது: எத்துனையோ மழைக் காலத்தை இச்சாலை பார்த்துவிட்டது, பல ஆண்டுகள் நாங்கள் பொருமையாக இருந்து விட்டோம், இவ்வாண்டும் தற்போது கோடை மழை ஆரம்பமாகி சாலையில் பயணிப்பது பெரும் சவாலாக உள்ளது, மேலும், இனியும் இச்சாலைப் பணிகளை துரிதப்படுத்தி புதிய தார் சாலை அமைத்துத் தராவிட்டால், இப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராடும் சூழ்நிலை விரைவில் ஏற்படும் என கூறினர்.

இதன் மூலம் டைம்ஸ் ஆப் அதிரை இணைய ஊடகம் 2,1 ஆகிய வார்டு கவுன்சிலர்களுக்கு, இச்சாலைப் பணி’யை துரிதமாக செயல் படுத்திட கோரிக்கை விடுக்கிறது!.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter