இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்கள் பிரதான மொபைல் சேவை வழங்கி வருகின்றன. மற்ற நிறுவனங்கள் சேவை வழங்கினாலும், இந்த இரு நிறுவனங்களுக்கே அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர் என சொல்லலாம்.
அதேபோல், இந்திய மொபைல் நெட்வொர்க் சந்தையிலும் இவை இரண்டு நிறுவனங்களே போட்டி நிறுவனங்களாக இருந்து வருகின்றன.
ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
ஏர்டெல் வாடிக்கையாளர்கலை தொடர்பு கொள்ள முடியவில்லை என சென்னையில் புகார் எழுந்துள்ளது. பல செல்போன்களில் சிக்னல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையின் பல இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் போன் பேச முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இணைய சேவையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நெட்வொர்க் என்பது குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கிறது. இந்த சமயத்தில் போன் கால் செய்தாலும் கூட எதிர்முனையில் பேசுவோரின் வாய்ஸ் சரியாக கேட்காமல் உள்ளது. மேலும் இணைய சேவையை என்பது ‘டெட் ஸ்லோவாக’ இருக்கிறது. வாட்ஸ்அப்பில் வரும் சாதாரண போட்டோக்களை கூட டவுன்லோட் செய்ய அதிக நேரம் எடுக்கிறது.