அதிரை மகாதிபின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நடைபெறும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள் இன்று (01-05-2025) இனிதே துவங்கியுள்ளன.
மாணவர்களுக்கு கோடை விடுமுறை நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதற்காக இவ்வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குர்ஆன், சுன்னா, மொழி, வரலாறு, நற்போதனை, எழுத்துப்பயிற்சி போன்ற பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், மாணவர்கள் செயல்முறை (Practicals) முறையில் பயிற்சி பெறும் வகையிலும் வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகின்றன. இடைவேளையில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
வகுப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.300 மட்டுமே!
சிறுவர்களும் சிறுமிகளும் தனித் தனி இடங்களில் பாதுகாப்பாகப் பயனடைந்து வருகிறார்கள்.
மாணவர்களின் ஆதரவும் பெற்றோர் ஊக்கமும் காரணமாக வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றன. சிறுவர் சிறுமியருக்கு மட்டுமின்றி, வாலிபர்களுக்காகவும் தனி வகுப்புகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.




