அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 18 வயதிற்குட்பட்டோருக்கான Under 18 எழுவர் கால்பந்து தொடர் போட்டி வருகின்ற 29 ஏப்ரல் 2025 AFWA மைதானத்தில் துவங்க உள்ளது.
இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
முதல் பரிசு : 5 அடி கோப்பை & ரொக்கப் பணம்
இரண்டாம் பரிசு : 4 அடி கோப்பை & ரொக்கப் பணம்
கோடை விடுமுறையை கழிக்கும் வகையில் இந்த கால்பந்து தொடர் அதிரையர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது சமயம் கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொள்ளும்படி AFFA நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
போட்டி விதிமுறைகள்:
- வீரர்கள் 2007 அல்லது அதற்குப் பிறகு (U-18) பிறந்திருக்க வேண்டும்.
- ஒவ்வொரு அணியும் 7 முதன்மை வீரர்கள் மற்றும் 3 மாற்று வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- ஒரு வீரர் ஒரு அணிக்காக மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார். பல அணிகளுக்காக விளையாடுவது தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
- போட்டி நேரங்கள்: 20+5+20
- அனைத்து வீரர்களுக்கும் போட்டி நடக்கும்பொழுது ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும். சரியான ஆதார் அட்டை இல்லாத வீரர்கள் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- அனைத்து அணிகளும் தங்கள் போட்டிக்கு குறைந்தபட்சம் 1 மணிநேரத்திற்கு முன் மைதானத்திற்குள் இருக்க வேண்டும்.
- கமிட்டியின் முடிவு இறுதியானது மற்றும் சர்ச்சைகள் மற்றும் முக்கியமான முடிவுகள் உட்பட அனைத்து விஷயங்களிலும் பிணைப்புக்குரியதாக இருக்கும்.
- வீரர்கள் எல்லா நேரங்களிலும் ஒழுங்குமுறைக் குழுவின் அறிவுறுத்தல்கள் மற்றும் முடிவுகளை மதிக்க வேண்டும் மற்றும் பின்பற்ற வேண்டும்.
நுழைவு கட்டணம் : 500₹
அணிகள் பதிவு மற்றும் நுழைவு கட்டணம் தொடர்புக்கு:
+91 84286 11346
+91 89404 73550
+91 73394 47523

