கோடை விடுமுறை துவங்கிய நிலையில், அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 01-05-2025 முதல் நடைபெறவிருக்கின்றன. வகுப்புகள் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இந்த வகுப்புகள் மே மாத இறுதிவரை தொடர்ந்து நடைபெறும். இதில் சேருவதற்கான முன்பதிவுகள் வரும் 24-04-2025 முதல் 30-04-2025 வரை நடைபெறும். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த கோடைக்கால சிறப்பு வகுப்பில் சேர்த்து, அவர்கள் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: வகுப்பின் இடைவேளையில் மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படும்.
ஆண்கள் / சிறுவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:
- சித்தீக் பள்ளி – தொடர்பு எண்: +91 93422 15580
- முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி (4 முதல் 6 வயது வரை) – தொடர்பு எண்: +91 91594 85087
- ஷாதுலியா புதுப் பள்ளி – தொடர்பு எண்: +91 98943 48321
- தக்வா பள்ளி – தொடர்பு எண்: +91 72007 29453
- மிஸ்கீன் பள்ளி – தொடர்பு எண்: +91 81225 38152
- மக்கா பள்ளி – தொடர்பு எண்: +91 96296 49170
- இஜாபா (வாலிபர்களுக்கு மட்டும்) – தொடர்பு எண்: +91 98650 43333
- மரைக்கா பள்ளி – தொடர்பு எண்: +91 80156 12124
பெண்கள் / சிறுமிகளுக்கான வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:
- மத்ரஸதுல் பனாத் – சித்தீக் பள்ளிக்கு பின்புறம், பெரிய நெசவுத் தெரு.
- அல்லதீஃப் பெண்கள் மக்தப் (நாஸர் ஹாஜியார் வீடு) – அல் லத்தீஃப் பள்ளி அருகில், CMP லேன்.
- ஹாஃபிழ் ஷரீஃப் வீடு – அபூபக்ர் (ரலி) சந்து, புதுப்பள்ளி மஹல்லா, ஆஸ்பத்திரி தெரு.
- உஸ்வதுர் ரசூல் பெண்கள் மதரஸா, புதுமனைதெரு
மேல் அதிக தகவலுக்கு:
அதிரை மகாதிப் முஆவின்கள்
+91 97913 58366 / +91 82208 87586