ரயில்வேயின் புதிய வாட்ஸ்அப் சேவை! ஒரே கிளிக்கில் முழுமையான தகவல்கள்!

Railway WhatsApp Service: இப்போது ரயில்வே தொடர்பான பல சேவைகளையும் வாட்ஸ்அப் மூலம் பெற முடியும். ரயில் பயணிகள் PNR நிலையை அறிதல், ரயில் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்தல், உணவு ஆர்டர், ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் அட்டவணை, கோச் நிலை ஆகிய பல தேவைகளுக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம். ரயில் பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கவும் வாட்ஸ்அப்பில் வழி உள்ளது.இப்போது ரயில்வே தொடர்பான பல சேவைகளையும் வாட்ஸ்அப் மூலம் பெற முடியும். ரயில் பயணிகள் PNR நிலையை அறிதல், ரயில் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்தல், உணவு ஆர்டர் என்று பல வசதிகள் வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படுகின்றன.

ரயில் பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கவும் வாட்ஸ்அப்பில் வழி உள்ளது. ரயில் பயணத்தின்போது தேவைப்படும் பல வசதிகளைப் பெறுவதை ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை எளிமையாக மாற்றியுள்ளது.

ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை தானியங்கி முறையில் செயல்படுகிறது. இதில் மனிதத் தலையீடு ஏதும் இல்லை. வாட்ஸ்அப்பில் உள்ள ரயில்வேயின் சாட்பாட் (chatbot) உடன் உரையாடுவதன் மூலம் ரயில் பயணிகளுக்குத் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

ரயிலோஃபை (Railofy) என்ற சாட்பாட்அடிப்படையில் வாட்ஸ்அப் சேவை செயல்படுகிறது. ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவைக்கு, 98811-93322 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்க வேண்டும்.

எண்ணைச் சேமித்த பிறகு, சாட்போட்டின் மெசேஜ் பாக்ஸுக்குச் சென்று ஆங்கிலத்தில் ஹாய் சொல்லுங்கள். சற்றுநேரத்தில் ஒரு மெசேஜ் வரும். அதில் PNR நிலை, ரயிலில் உள்ள உணவு, எனது ரயில் எங்கே இருக்கிறது, ரிட்டர்ன் டிக்கெட் பதிவு, ரயில் அட்டவணை, ரயில் பயணத்தின் போது கோச் நிலை, புகார் அளித்தல் போன்ற ஆப்ஷன்கள் தெரியும். இதில் தேவையான சேவையைத் தேர்வு செய்து, தொடர்ந்து சாட்பாட் கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றலாம்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders