கோப்பையை தட்டிச்சென்றது FFC கண்டனுர் அணி! நிறைவடைந்தது ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் கால்பந்து தொடர்! (படங்கள்)

ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் நடத்திய இரண்டாம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடந்த 08/09/2023 மாலை 6:00 மணி முதல் நடைபெற்று வந்தது, 32 அணிகள் பங்கு பெற்ற இத்தொடர் இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இரவு 7:30 மணி அளவில் முதல் அரையிறுதி ஆட்டமாக அதிரை ராயல் FC அணியினருக்கும் ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் அணியினருக்கும் நடைபெற்ற போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் அணி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி ஆட்டமாக செய்யார் வெள்ளூர் அணியினருக்கும் FFC கண்டனுர் அணியினருக்கும் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் FFC கண்டனுர் அணி வெற்றிபெற்றது.

கடைசியாக இரவு 10:30 மணி அளவில் இறுதிப்போட்டியாக ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் அணியினரும் FFC கண்டனுர் அணியினரும் போட்டியிட்டனர் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 5-3 என்ற கோல் கணக்கில் FFC கண்டனுர் அணியினர் வெற்றிபெற்றனர்.

டாஸ் மூலம் செய்யார் வெள்ளூர் அணியினர் மூன்றாம் இடத்தையும், அதிரை ராயல் FC நான்காம் இடத்தையும் பெற்றது…

முதல் இடத்தை பெற்ற FFC கண்டனுர் அணியினருக்கு 1,00,023₹ பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தை பெற்ற ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் அணியினருக்கு 50,023₹ பரிசு வழங்கப்பட்டது.

மூன்றாம் இடத்தை பெற்ற செய்யார் வெள்ளூர் அணியினருக்கு 25,023₹ பரிசு வழங்கப்பட்டது.

நான்காம் இடத்தை பெற்ற அதிரை ராயல் FC அணியினருக்கு 25,023₹ பரிசு வழங்கப்பட்டது.

3 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times