அதிரை அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடக்கம்! நகராட்சி மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு!!

ஆகஸ்ட் 28 2023
தமிழக முதல்வரின் சிறப்பான பல திட்டங்களில் ஒன்றான அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் முன்பே சில மாவட்டங்களில் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அதை விரிவுபடுத்தும் வண்ணம் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களின் சிரமம் குறைக்க கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழக முதல்வரின் எண்ணத்திற்கு ஏற்ப தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது

அதிராம்பட்டினம் நடுத்தெரு அரசு பள்ளியில் நகராட்சி தலைவர் M M S தாகிரா அம்மாள் அப்துல் கரீம், நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் இத்திட்டத்தை துவக்கி வைக்க அவர்களுடன் இணைந்து சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், 12 வது வார்டு கவுன்சிலர் ராலியா சைபுத்தியின், 7வது வார்டு திமுக கழகச் செயலாளர் மரக்காயர் இத்ரீஸ் அஹமது, முன்னால் கவுன்சிலர் இப்ராஹிம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் திமுக வார்டு செயலாளர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி ஊட்டி விட்டு மகிழ்ந்தனர்

கல்வியில் கவனம் செலுத்தி குறிப்பாக குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் அவர்கள் பசியால் வர தாமதிக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நகர திமுக கழகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

2 Comments
  • Melissat
    Melissat
    June 28, 2024 at 2:09 pm

    Very informative! Your insights are highly valuable. For additional details, check out: LEARN MORE. What are everyone’s thoughts?

    Reply
  • Josephinet
    June 29, 2024 at 6:28 pm

    I found this article both informative and thought-provoking. The analysis was spot-on, and it left me wanting to learn more. Let’s discuss further. Check out my profile for more related discussions!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders