வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு!

நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.

முக்கிய முடிவுகள்

• பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

• இதையடுத்து, இன்று முதல் அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

• அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிப்பது தொடர்பாக ஆலோசிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிரையிலும் உள்ள அனைத்து வங்கிகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. வங்கிச் சேவைகள் தடையின்றி இயங்கும் என்பதால் அதிரை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி வழக்கம்போல் தங்களது வங்கிப் பணிகளை மேற்கொள்ளலாம்.

Advertisement