அதிரை இப்ராஹிம் பள்ளியில் நடைபெற்ற ஆறு நோன்பு இப்தார் நிகழ்வு இன்றுடன் நிறைவு!!

நாம் ஆவலுடன் எதிர்பார்த்த புனித மாதம் அல்குர்ஆன் அருளப்பட்ட சங்கையான ரஹ்மத் நிறைந்த ரமலான் மாதத்தில் நல் அமல்கள் செய்து பகல் , இரவு வணக்க வழிபாடுகளில் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலை படுத்திக் கொண்டது
மிக சிறப்பு!

மாஷா அல்லாஹ் வீடுகளிலும் , மஸ்ஜித் களிலும் அல்லாஹ்வின் கலாமை ஓதுவதிலும்
நல் அமல்கள் செய்வதிலும் ரஹ்மத் நிறைந்த மாதத்தின் மிக சிறப்பு!

தராவீஹ் , வித்ரு , கியாமுல் லைல் தொழுகைகளில் அதிரை ஹாஃபிழ் மார்கள் அல்குர்ஆனை தஜ்வீதுடன் அழகான முறையில் தொழுகை வைத்தது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

பத்து வயதில் இருந்து பெரியோர்கள் வரை ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகை வைத்தது
மாஷா அல்லாஹ் அருமை!

ஒரே வகுப்பை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புனித ரமலான் மாதத்தில் அல்குர்ஆனை ஓதுவதற்கு தனக்கு கிடைத்த நேரங்களை
நல்ல முறையில் பயன் படுத்திக் கொண்டு ஓதி முடித்துள்ளார்கள் , அதிலும் ஐந்து மாணவர்கள் மூன்று முறை ஓதி முடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது!

சிறந்த ஆசியரின் நல் வழிகாட்டலில் மாணவர்கள் படித்துக் கொண்டு வீடுகளிலும் , மஸ்ஜித் களிளும் ஓதியது மாஷா அல்லாஹ் பெற்றோர்களையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது!

இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

அதேபோல் ஆறு நோன்பு பிடிதவர்களுக்காக
We are friends நண்பர்கள் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு!
மாஷா அல்லாஹ் ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றது!
அல்ஹம்துலில்லாஹ்.
ஒவ்வொரு நாளும் 30 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது மிக சிறப்பு!

நண்பர்களின் குழு மிக சிறப்பான முறையில் அனைவரையும் நன்கு
கவனித்தது அருமை!!

இதில் பங்கெடுத்து கொண்ட , முயற்சிகள் செய்த , உதவிகள் செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் பரகத் செய்வானாக ஆமீன்!

ரமலான் மாதத்தில் செய்த நல் அமல்களை மற்ற நாட்களிலும் தொடர்ந்து செய்திட வேண்டும்.
நல் அமல்களினால் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொருவரும் சிறந்து விளங்க வேண்டும்!!

Prayer Times