அதிரையை சார்ந்தவர் சாஹுல் ஹமீத்(24) இவர் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர், இவர் கடந்த 2022ஆம் ஆண்டு Shahul Vlog என்ற YouTube சேனல் ஒன்றை துவங்கி தன்னுடைய விடா முயற்சியால் தற்போது ஒரு லட்சம் Subscriber’களையும்
சுமார் 2 கோடி பார்வையாளர்களையும் பெற்று அதிரையை சார்ந்த முதல் இளம் YouTuber என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து Times Of Adirai நிருபருக்கு பேட்டி அளித்த ஷாஹுல் ஹமீத், பெற்றோர்களின் அதிகமான ஊக்குவிப்பும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் பேராதரவுமே தான் இந்த நிலையை அடைய முடிந்தது என பெருமிதம் தெரிவித்தார்,
“மேலும் தாங்கள் இந்த YouTube சேனலை துவங்கியதின் நோக்கம் என்ன ? என்று நிருபர் கேட்ட கேள்விக்கு.
சாஹுல்: அடுத்தவர்களை சந்தோஷ படுத்தனும், அடுத்தவர்களுக்கு உதவி செய்யணும் என்று பதிலளித்தார்.”
Shahul Vlog சேனலின் காணொளிகள் அதிரை மட்டுமல்லாது உலகெங்கிலும் இருக்கக்கூடிய பல கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரையை சார்ந்த பல இளைஞர்கள் பல துறைகளில் சிறப்பாக சாதனை படைத்து வருகின்றனர், அவர்களின் வரிசையில் புதிதாக Digital துறையில் ஒரு லட்சம் Subscriberகளை பெற்ற அதிரையின் முதல் இளம் YouTuber ஷாஹுல் ஹமீத் அவர்களை Times Of Adirai சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதோடு மேலும் பல சாதனைகள் படைத்து உயர்ந்து பறக்க வாழ்த்துகிறது உங்கள் Times Of Adirai (TOA)
I loved the wit in this piece! For more on this topic, visit: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!