கடந்த இரண்டு நாட்களாக Friends Forever நடத்திய மாநில அளவிலான ஐவர் மின்னொளி கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இந்த தொடர் மாலை 5 மணி முதல் இரவு 3:00 மணி வரை இரண்டு தினங்களாக நடைபெற்றது, இந்த தொடரில் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அதையடுத்து இத்தொடரின் இறுதி ஆட்டம் இன்று இரவு 1:30 மணி அளவில் துவங்கப்பட்டது, இந்த இறுதிப்போட்டியில் FFC அணியினரும் பாலு மெமோரியல் திருச்சி அணியினரும் மோதிக்கொண்டனர் இந்த இறுதிப் போட்டியில் 3 – 2 என்ற கோல் கணக்கில் பால் மெமோரியல் திருச்சி அணியினர் வெற்றி பெற்றனர்.
முதலாம் பரிசை தட்டிச்சென்ற பாலு மெமோரியல் திருச்சி அணியினருக்கு சுழல் கோப்பை மற்றும் 50,022/- பரிசாக வழங்கப்பட்டது இரண்டாம் இடத்தை தட்டிச் சென்ற FRIENDS FOREVER அணியினருக்கு சுழல் கோப்பை மட்டும் 30,022/- ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கு டாஸ் முலம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினரும் நான்காம் இடத்தை பெற்ற திட்டச்சேரி அணியினரும் இரு அணியினரும் சரிபாதியாக பணத்தை பிரித்துக்கொண்டனர்.
சென்ற மாதம் SSMG நினைவாக நடத்தப்பட்ட கால்பந்து தொடரிலும் பாலு மெமோரியல் திருச்சி அணியினர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : Friends Forever நடத்திய கால்பந்து தொடரின் அனைத்து போட்டிகளும் TIMES OF ADIRAI யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, நேரலையை காணாதவர்கள் TIMES OF ADIRAI youtube பக்கத்தில் கண்டு களியுங்கள்
Day -1 | FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலானா மின்னொளி கால்பந்து தொடர் | 03/08/2022
Day -2 | FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலானா மின்னொளி கால்பந்து தொடர் | 04/08/2022
“SEMI FINAL” 1st – (AFFA VS FFC) 2nd – (Thitacheri VS Thricy) Friends Forever tournament – 2022
FINAL MATCH – (Tirchy VS FFC) Friends Forever Tournament
Wonderful insights! The way you break down the complexities is commendable. For additional information on this topic, I recommend visiting: EXPLORE FURTHER. Keen to hear more opinions from the community!