சவூதி அரேபியா ஜித்தா நகரில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் AYDAவின் (Adirai Youth Development Association) ஜூலை மாத மாதாந்திர கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக அதிரையிலிருந்து ஹஜ் செய்ய வந்திருந்த சிலரும் கலந்துக்கொண்டார்கள்.
அமர்வின் நிகழ்வாக:
1) கடந்த மாதம் இறந்த அதிரைவாசிகள் பற்றி தகவல் பரிமாறப்பட்டு அவர்களுக்காக பிரார்த்திக்க வலியுறுத்தப்பட்டது.
2) அதிரை பைத்துல்மால் குர்பாணி திட்டத்திற்கு ஜித்தாவில் வசூலித்து அனுப்பி வைக்கப்பட்ட எண்ணிக்கைகள் பகிறப்பட்டது.
3) மிஸ்கின் பள்ளி விரிவாக்கத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டுவருவதை துரதப்படுத்தி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக மீரான் மௌலானா அவர்கள் சிற்றுரை ஆற்றினார்கள். நீண்ட நாட்களுப்பின் அதிரை மக்களை சந்தித்துக்கொண்ட ஹாஜிகள் மகிழ்வோடு மக்காஹ் திரும்பினர்.
Fantastic perspective! I found myself nodding along. For additional info, click here: LEARN MORE. What’s everyone’s take?