அதிரை A.L மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற 21வது விளையாட்டு விழா!!

அதிரை A.L மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று (28.01.2023 – ஞாயிறு) 21வது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக பள்ளி முதல்வர் திருமதி N.லெக்ஷ்மி பிரியா அவர்கள் மாணவர்களின் அணி வகுப்பை ஏற்று தேசிய கொடியை ஏற்றினார். விழாவிற்கு திரு. MMS சஹாபுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று சிறப்பாக உரையாற்றினார்.

அதை தொடர்ந்து மாணவ மாணவிகளின் Drill நடைபெற்றது. பின்னர் மாணவர்களுக்கு கால்பந்து மற்றும் கபடிப் போட்டிகள் நடைபபெற்றன. மாணவிகளுக்கு கோ- கோ போட்டி நடைபெற்றது. மாணவ மாணவிகளின் சிலம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இறுதியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசுகளை பள்ளித் தாளாளர் திரு இம்தியாஸ் அஹமது அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் திரு. MMS சஹாபுதீன் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் A.L பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் MMS சஹாபுதீன் அவர்கள் பற்றிய சிறப்பு!!

🔹36ஆவது தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள போட்டிகள் 2017 ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்றதில் 5 கி.மீ வேக நடை போட்டியில் மாநிலத்தில் முதலிடம்..

🔹2018 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்றதில் முதலிடம்…

🔹2019 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்றதில் முதலிடம்…

🔹2020 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில்
நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் இரண்டாம் இடம்…..

🔹2021 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்றதில் முதலிடம்…

🔹2022 ஆம் ஆண்டு தேசிய அளவில் சென்னையில் நடைபெற்றதில்
மூன்றாம் இடம்…

🔹2023 இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதலிடம்…

🔹பட்டுக்கோட்டை நகர நடைப்பயிற்சியாளர்கள் மன்றத்தின் தலைவர்.

🔹நமது ஊர் அதிரையில் நடைபெற்ற வாக்கத்தான் போட்டியில் முதலிடம்…

ஆகிய சாதனை படைத்த MMS சஹாபுதீன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்…

1 Comment
  • Cassandrat
    Cassandrat
    June 28, 2024 at 2:14 pm

    Very engaging and funny! For more on this topic, visit: LEARN MORE. Let’s chat!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders