இமாம் ஷாபி பழைய பள்ளி நில மீட்பின் தூணாக இருந்த அதிரை இணைய ஊடகங்கள் – APPC!

- Advertisement -
Ad imageAd image

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளியின் நிலம் மீட்பு போராட்டம் 11 நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு நேற்று இரவு அதிகாரிகள் பள்ளியின் சீலையும் பூட்டையும் அகற்றினர். அருகில் வைக்கப்பட்டிருந்த நகராட்சியின் பேனர்களும் கிழிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் அதிராம்பட்டினம் பெண்கள், ஆண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் பள்ளி நிர்வாகம், வழக்கறிஞர்கள், போராட்டக் குழுவினர் மேற்கொண்ட சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நகர்வுகள் காரணமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்த போராட்டத்தின் மூலம் உள்ளூர் ஊடகங்களின் முக்கியத்துவத்தை அதிரை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். காரணம் டிசம்பர் மாதம் தொடங்கி இதுவரை இமாம் ஷாபி பழைய பள்ளி நில விவகாரம் தொடர்பாக பரப்பப்பட்டு வந்த அவதூறுகள் அனைத்திற்கும் அதிரை இணையதளங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன. தொடர்ந்து வழக்கு தொடர்பாகவும் போராட்டம் தொடர்பாகவும் அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் உடனுக்குடன் செய்திகளை அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை, டைம்ஸ் ஆப் அதிரை ஆகிய ஊடகங்கள் வெளியிட்டு வந்துள்ளன. அதேபோல் கிரியேட்டிவிட்டி, MST வியூஸ், அதிரை ஜாபர் ஆகிய யூடியூப் சேனல்கள் போராட்டத்தை காணொளி வடிவில் வெளியிட்டன. உள்ளூர் ஊடகங்களின் தொடர் முயற்சியின் பலனாக பிரபல தமிழ் தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், இணையதளங்கள் இதை செய்தியாக்கி உள்ளன.

நீதியை நிலை நாட்ட வேண்டும், அதிராம்பட்டினம் சிறுபான்மையின மக்களின் கல்வி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கில் அதிரை ஊடகங்கள் பல நாட்களாக இரவு பகல் பாராமல் உழைத்து உள்ளன. உள்ளூர் ஊடகங்கள் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த வெறுப்பு பிரச்சாரங்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்து ஊடகங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது. இந்த மகத்தான பணியை மேற்கொண்ட ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை குறிப்பிடுவதன் நோக்கம் உள்ளூர் ஊடகங்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும் என்பதுடன், ஊடகத்துறை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter